திருமானூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது


திருமானூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அரியலூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

திருமானூர்,

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அரியலூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் திருமானூர் ஒன்றியத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இதில், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 52 பணியாளர்களில் 37 பேரும், 36 ஊராட்சி செயலாளர்களில் 2 காலியிடங்கள் போக 34 பேரில் 19 பேரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story