சாக்கடை கலந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அவதி பொதுமக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
திருச்சி பாலக்கரை ஜெயில் தெருவில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அவதியடைந்த பொதுமக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்சி மாநகரிலும் மழை கொட்டித்தீர்த்தது.
திருச்சி பாலக்கரை முதன்மை கல்வி அலுவலகம் எதிரே உள்ள ஜெயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சாக்கடை நிரம்பி பெருக்கெடுத்த கழிவுநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். விடிய விடிய தூங்காமல் விழித்திருந்து வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வாளி கொண்டு எடுத்து வெளியேற்றினர். இருப்பினும் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறியபடியே இருந்தது.
அதைத்தொடர்ந்து அப்பகுதி ஆண்களும், பெண்களும் முதன்மை கல்வி அலுவலகம் முன்புள்ள மதுரை ரோட்டில் சாலைமறியல் போராட்டத்துக்காக திரண்டனர். வீட்டில் குடியிருக்க முடியாத வகையில் சாக்கடை கழிவுநீர் புகுந்து விட்டது என்றும், முறையாக சாக்கடை கால்வாயை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தூர்வாரவில்லை என்றும் குற்றச்சாட்டை கூறினர். தகவல் அறிந்ததும் திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் விரைந்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு, ‘புதை வடிகால் அடைப்பு அகற்றும்’ வாகனத்துடன் வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட தயாரானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சாக்கடை அடைப்புக்கு, வீடுகளில் உள்ள குப்பைகளை முறையாக பராமரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்காமல் குடியிருப்புவாசிகள் வீசியெறிந்ததால் இதுபோன்ற அடைப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதற்கு பொதுமக்கள் தரப்பில், மழையினால் சாக்கடை கால்வாயில் அடித்து வரப்படும் குப்பைகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?. முறையாக மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை தூர்வாராததே காரணம் என்று எதிர்வாதம் செய்தனர். பின்னர் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உறுதி அளித்ததும் பொதுமக்கள் தங்களது போராட்ட முயற்சியை கைவிட்டனர்.
மேலும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஜெயில் தெருவில் சாக்கடை சிலாப்புக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட அடுப்பு கரி மூட்டைகள் இருந்தன. தண்ணீர் அடைப்புக்கு அதுவும் காரணம் எனக்கூறி, அம்மூட்டைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து கூறினர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சமயபுரம்-171, தேவிமங்கலம்-102.80, வாத்தலை அணைக்கட்டு-90.50, லால்குடி-77, திருச்சி விமான நிலையம்-66.40, முசிறி-58, புல்லம்பாடி-55.60, செருக்குடி-55, திருச்சி ஜங்சன்-54. திருச்சி டவுன்-54, புலிவலம்-50, கல்லக்குடி-40.20, பொன்மலை-39.80, நவலூர் கொட்டப்பட்டு-24.60, கோவில்பட்டி-20.40, மருங்காபுரி-19.20, துறையூர்-19, நந்தியாறு அணை-15.20, மணப்பாறை-14.60, துவாக்குடி-5.40, தா.பேட்டை-5.
திருச்சி மாவட்டம் சமய புரத்தில் அதிகபட்சமாக 171 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story