நேபாளத்தில் நிலச்சரிவு: கைலாய யாத்திரைக்கு சென்ற ஓசூர் தம்பதி சிக்கி தவிப்பு
நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கைலாய யாத்திரைக்கு சென்ற ஓசூர் தம்பதி அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்களை விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஓசூர்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக நேபாள நாட்டில் உள்ள கைலாய யாத்திரைக்கு பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். தற்போது மோசமான காலநிலையால் அங்கு பெய்த தொடர் மழை பெய்தது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அங்கு சுற்றுலா சென்ற அவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதில், நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் பஞ்சமுகி என்கிற ஓட்டலில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பல தமிழர்கள் தங்கி உள்ளனர். அவர்கள், கடந்த 5 நாட்களாக தங்கியிருப்பதாகவும், அரசு தரப்பில் தங்களை மீட்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும், அரசு வழங்கிய தொடர்பு எண்ணை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் வாட்ஸ்-அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. தங்களை விரைந்து மீட்க மத்திய அரசும், நேபாள அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செம்மொழி நகரைச்சேர்ந்த மனோகரன் - தேவி தம்பதியும் அடங்குவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மனோகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாய யாத்திரை சென்ற இடத்தில் தற்போது இயற்கை இடர்பாடுகளில் சிக்கி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சிமிகோட் பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து, மேகமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உள்ளனர். நாங்கள் உள்ள பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். உணவிற்கு தேவையான பொருட்கள் உள்ளதால் சிரமம் ஏற்படவில்லை. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.
நேபாள அரசு சோலார் மின் சக்தி மூலம் இணையதள வசதி ஏற்படுத்தி தந்துள்ளதால், இணையதளம் மூலம் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், எவ்வித பாதிப்பும் இல்லை. இப்பகுதியில் ஆக்சிஜன் குறைவாக உள்ளதால், மருத்துவக்குழுவினர் இங்குள்ளவர்களுக்கு சுவாச பரிசோதனைகள் செய்து சிகிச்சையளித்து வருகின்றனர். தங்களை விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூரில் உள்ள மனோகரனின் உறவினர்கள் கூறும் போது, கைலாய யாத்திரைக்கு சென்ற மனோகரன் தம்பதியை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story