வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பு மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
வேப்பனப்பள்ளி அருகே மின்வாரிய அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமகனப்பள்ளி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின்மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதன்படி சுமார் 150 மின்மோட்டார்கள் தண்ணீர் பாய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் குறைந்த மின்அழுத்தம் உள்ளதால் மின்மோட்டார்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால் பயிர்களுக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து அதிக மின்அழுத்தம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கலெக்டரிடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப் படுகிறது.
இந்த நிலையில் சிகரமகனப்பள்ளி கிராமத்தின் அருகே தனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக புதிய மின் இணைப்பு வழித்தடத்தை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நேற்று வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் அங்கு சென்று மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், தங்களுக்கு டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுத்து கூடுதல் மின் அழுத்தம் வழங்க நடவடிக்கை எடுத்து விட்டு அதன் பின்னர் புதிய மின் இணைப்பு வழித்தடத்தை அமைத்து கொள்ளுங்கள் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ளாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story