பட்டப்பகலில் தந்தையை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன், நண்பருடன் கைது
ஓமலூர் அருகே பட்டப்பகலில் தந்தையை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன் மற்றும் அவரது நண்பரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
ஓமலூர்,
ஓமலூர் அருகே உள்ள கீழ்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 60). இவர் இந்தியன் வங்கியில் உதவியாளராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு பரிமளாதேவி(27) என்ற மகளும், ஸ்ரீதர்(24) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுப்பிரமணியும், ஜெயலட்சுமியும் கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகின்றனர். ஜெயலட்சுமி தனது மகன் ஸ்ரீதர், மருமகள் கார்த்திகா ஆகியோருடன் மேட்டூரில் உள்ள பொன்னர் நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயலட்சுமிக்கு சொந்தமான 2 பவுன் நகை சுப்பிரமணியிடம் இருந்ததாக தெரிகிறது. இதை பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீதர், தனது நண்பர் பிரவீனுடன் கீழ்காமாண்டப்பட்டிக்கு வந்தார். அங்கு தந்தை சுப்பிரமணியை சந்தித்து தனது தாயின் நகையை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், தனது நண்பர் பிரவீன் உதவியுடன் தந்தை சுப்பிரமணியை கத்தியால் குத்த முயன்றார். மகன் தன்னை கொல்ல வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.
பின்னர் ஸ்ரீதரையும், அவரது நண்பர் பிரவீனையும் அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் பெற்ற மகனே தந்தையை கொல்ல முயன்ற சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story