கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.1,200 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.1,200 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 10:36 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.1,200 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே அழகியமண்டபத்தில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தை விட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குற்ற எண்ணிக்கையும், நக்சலைட்டின் ஆதிக்கமும் குறைந்து வருகிறது. ஆனால், நக்சலைட் இல்லாத தமிழகத்தில், நக்சலைட்டுகள் தற்போது வளர்ந்து வருவதை தமிழக அரசு விரும்புகிறதா? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.


 கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.1,200 கோடி செலவில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

கவர்னரின் அதிகாரத்தை செயல்படுத்த அவருக்கு அதிகாரம் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு துணைநிலை கவர்னருக்கான அதிகாரத்துக்கு மட்டுமே தீர்ப்பு கூறியுள்ளது.

மத்திய அரசையும், கவர்னரையும் காரணம் காட்டி சிலர் தமிழக அரசின் செயல்பாட்டை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டாட்சி முறை தொடர்பாக தி.மு.க. சொல்லும் தத்துவத்தை ஏற்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு பின்பற்றும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் ஜனநாயக கடமையை ஆற்றியபின் பிற பணியை கவனிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story