நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் காலி தட்டு ஏந்தி போராட்டம்


நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் காலி தட்டு ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் காலி தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், இலவச பஸ் பாஸ், மருத்துவப்படி, அகவிலைப்படி, பொங்கல் பரிசு வழங்க வேண்டும், ஈமக்கிரியை செலவுநிதி ரூ.25 ஆயிரம் உள்பட ஒட்டுமொத்த தொகை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து, காலி தட்டு ஏந்தி மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடந்தது.

இதேபோல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தங்கசுவாமி தலைமை தாங்கினார். சிஸ்லெட் வரவேற்று பேசினார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சுமதி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஐவின், சி.ஐ.டி.யூ. தங்கமோகன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நீலத்தங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களில் பலரும், பெண்கள் பலரும் கருப்பு சட்டை மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்து பங்கேற்றனர். அனைவரும் கைகளில் காலித்தட்டுகளை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story