நாகர்கோவில்–நெல்லை இடையே இயக்கப்படும் புதிய ‘என்ட் டூ என்ட்’ பஸ்களுக்கு கண்டக்டர் கிடையாது
நாகர்கோவில்–நெல்லை இடையே இயக்கப்படும் புதிய ‘என்ட் டூ என்ட் பஸ்கள்‘ கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டன. பயணிகள் பஸ் நிலையத்திலேயே டிக்கெட் பெற்று பஸ்சில் பயணம் செய்தனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு என்ட் டூ என்ட் வழித்தடத்தில் தினமும் 20 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பஸ்களில் 10 பஸ்கள் நாகர்கோவில் மண்டலத்துக்கு வந்துள்ளன. அவற்றில் 9 பஸ்கள் நாகர்கோவில்–நெல்லை என்ட் டூ என்ட் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. பழைய என்ட் டூ என்ட் பஸ்களுக்கு மாற்றாக 9 பஸ்களும் இயக்கப்படுகிறது.
நவீன வடிவமைப்பு, மெத்தை போன்ற இருக்கைகள், தானியங்கி கதவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்ட இந்த பஸ்களில் பயணிகள் ஆர்வத்தோடு பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில்–நெல்லை என்ட் டூ என்ட் வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் பரிசோதனை முறையில் நேற்று காலையில் இருந்து இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு நாகர்கோவில் பஸ் நிலையத்திலும், நெல்லை பஸ் நிலையத்திலும் பஸ் புறப்படுவதற்கு முன்பாக பயண டிக்கெட் வழங்கப்பட்டது.
சோதனை முறையில் கண்டக்டர் இல்லாமல் வெற்றிகரமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே நாகர்கோவில்– நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் அனைத்திலும் படிப்படியாக கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
20 என்ட் டூ என்ட் பஸ்களுக்கும் பயண டிக்கெட் வழங்க வசதியாக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திலும், நெல்லை பஸ் நிலையத்திலும் தலா 3 கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பஸ் புறப்படுவதற்கு முன்பாக பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி விடுவார்கள். அதன் பிறகு ஒரு முனையில் இருந்து புறப்படும் பஸ் மறுமுனையில் தான் நிறுத்தப்படும். எனவே இடைப்பட்ட பகுதியில் பயணிகள் யாரையும் ஏற்றவும் மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story