‘பசுமை சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்’ ஜாமீனில் வெளியே வந்த மாணவி வளர்மதி பேட்டி
‘பசுமை சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்‘ என்று ஜாமீனில் வெளியே வந்த கல்லூரி மாணவி வளர்மதி கூறினார்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த மாதம் நில அளவீடு செய்யும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த வீராணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி இந்த திட்டத்துக்கு எதிராக பேசினார். இதையடுத்து அவரை வீராணம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் வளர்மதி கலந்து கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி போலீசார் கைது செய்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்ற வளர்மதி நேற்று பிற்பகல் சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் அங்கு 8 வழி பசுமை சாலைக்கு எதிராக கோஷமிட்டார். இதையடுத்து மாணவி வளர்மதி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- சேலம்-சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் பொதுமக்களையும், எங்களை போன்றவர்களையும் போலீசார் கைது செய்கின்றனர். இவர்களில் பொதுமக்களை போலீசார் விட்டுவிட்டு எங்களை மட்டும் சிறையில் அடைக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பசுமை வழிச்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். மேலும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் சமீபத்தில் வளர்மதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அனுமதி இல்லாத ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் அவர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் நேற்று காலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வளர்மதியை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் விடுவிக்கப்படும் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால், ஏற்கனவே 2 வழக்குகளில் கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்றுள்ளதால் சிறையில் இருந்து வெளியே வருவதில் வளர்மதிக்கு சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.

Related Tags :
Next Story