குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி நாகையில், சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சங்கத்தை சேர்ந்த மரியஜெயராஜ், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, சத்துணவு அங்கன்வாடி சங்கத்தை சேர்ந்த ஜெயலட்சுமி, அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு ஓய்வூதிய சட்டப்படி ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.

மருத்துவப்படி ரூ.300 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். ஈமக்கிரியை செலவு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் தட்டு ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த மூர்த்தி நன்றி கூறினார்.

Next Story