ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
போராட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி அமர்த்த வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த பதிவுறு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கலெக்டரே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 9 பேரை தவிர மற்ற அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்களும், 589 ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள், ரகுநாதன், செல்வேந்திரன், மகேஷ், இணை செயலாளர்கள் கார்த்திகேயன், தேசிங்குராஜன், நிர்வாகிகள் சக்திநாதன், சுகுமார், சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராகவன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story