மினி லோடு வேன் மோதி வாலிபர் சாவு


மினி லோடு வேன் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 July 2018 3:15 AM IST (Updated: 7 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற டிராக்டர் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

குத்தாலம், 
 
குத்தாலம் அருகே ஓதாரி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (வயது 25). டிராக்டர் டிரைவர். காஞ்சிவாய் கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் அஜித்குமார் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் 2 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் காஞ்சிவாய் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். அப்போது எதிரே வந்த ஒரு மினி லோடு வேன் திடீரென விஜயகுமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமார், அஜித்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயகுமார், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயம் அடைந்த அஜித்குமாருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மினி லோடு வேன் டிரைவர் ஒரத்தநாட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story