மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசாரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தகவல் + "||" + In the northern district of Thoothukudi DMK On behalf of the youth team Street campaign

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசாரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசாரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தகவல்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளதாக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளதாக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

தெருமுனை பிரசாரம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) புதூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நாகலாபுரம் மற்றும் மாசார்பட்டி பகுதிகளிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவில்பட்டி நகரம் சார்பில் பயணியர் விடுதி முன்பு மற்றும் வேலாயுதபுரம் கே.வி.கே. சாமி படிப்பகம் ஆகிய இடங்களிலும், 10–ந்தேதி விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் சார்பில் சிவஞானபுரம், கரிசல்குளம் ஆகிய இடங்களிலும், 11–ந்தேதி புதூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் புதூர் பஸ் நிலையம் முன்பு, சிவலார்பட்டி ஆகிய இடங்களிலும் தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளது.

பொதுக்கூட்டம்

அதேபோல் 14–ந்தேதி கயத்தாறு மேற்கு ஒன்றியம் சார்பில் கழுகுமலை காந்தி மைதானம், செட்டிகுறிச்சி பஜார் ஆகிய இடங்களிலும், 17–ந்தேதி கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில் லிங்கம்பட்டி, தாமஸ்நகர் ஆகிய பகுதிகளிலும், 18–ந்தேதி கயத்தாறு கிழக்கு ஒன்றியம் சார்பில் காப்புலிங்கம்பட்டி, அகிலாண்டபுரம் ஆகிய இடங்களிலும், 19–ந்தேதி கோவில்பட்டி கிழக்கு மற்றும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் எட்டயபுரம், எப்போதும் வென்றான் ஆகிய இடங்களிலும், 20–ந்தேதி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் வேம்பார், குளத்தூர் ஆகிய பகுதிகளிலும், 21–ந்தேதி தூத்துக்குடி மாநகரம் 12–வது வட்ட தி.மு.க. சார்பில் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பிலும் தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளது.

22–ந்தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ராசா கலந்து கொள்கிறார். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தெருமுனை பிரசாரத்தை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.