மாவட்ட செய்திகள்

தினம் ஒரு தகவல் : தூங்கும்போது காற்றோட்டம் அவசியம் + "||" + Day one Information: Ventilation is necessary when sleeping

தினம் ஒரு தகவல் : தூங்கும்போது காற்றோட்டம் அவசியம்

தினம் ஒரு தகவல் : தூங்கும்போது காற்றோட்டம் அவசியம்
இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள்.
ஏ.சி. இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.


பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்யத் தொடங்கும்.

அது நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் உள்ளன. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்’ என்று அழைக்கிறார்கள்.

சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிகிறது. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.

ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு’ என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம்.