சாரம் போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
புதுவை சாரம் பகுதியில் போக்குவரத்து கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்களுக்கு பாதுகாப்பான உயர்ரக நம்பர் பிளேட் பொருத்துதல், லைசென்சு, பெர்மிட் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி,
புதுவை சாரம் பகுதியில் போக்குவரத்து கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்களுக்கு பாதுகாப்பான உயர்ரக நம்பர் பிளேட் பொருத்துதல், லைசென்சு, பெர்மிட் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. நம்பர்பிளேட் பொருத்த குறிப்பிட்ட தேதி, நேரம் கொடுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும். கடந்த சில நாட்களாக போதுமான நம்பர் பிளேட் இல்லாதால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் நம்பர் பிளேட் பொருத்தும் பணி நடந்தது. அப்போது ஏராளமானோர் தங்கள் வாகனங்களுடன் அங்கு குவிந்தனர். கூட்ட நெரிசலின் காரணமாக பணிகள் தாமதமாகின. எனவே காலதாமத்தை கண்டித்து போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போக்குவரத்து துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்து அதன் அடிப்படையில் நம்பர் பிளேட் பொறுத்தப்படும் என்று கூறினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story