கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்


கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 July 2018 4:15 AM IST (Updated: 9 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, கொச்சி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த நஜிமுதீன் என்பவர் தனது உடைமையில் மறைத்து 359 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவரிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு கடத்த முயன்ற ரூ.37 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story