மூங்கில்துறைப்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


மூங்கில்துறைப்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2018 3:15 AM IST (Updated: 9 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25), விவசாயி. இவருக்கும் மூங்கில் துறைப்பட்டு அருகே உள்ள சிட்டாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகள் ரோஜா(20) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ரோஜா மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோஜா, சிட்டாந்தாங்கலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ரோஜா, வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரோஜாவின் தந்தை சுப்புராயன் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து ரோஜா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story