30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நியாய விலைக்கடை பணி யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலங்களாக வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். 500 குடும்ப அட்டை உள்ள நியாய விலை கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Next Story