சாலை வசதி கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சாலை வசதி கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பழனி,
சாலை வசதி கோரி பழனி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடி 14-வது வார்டு பொன்னாபுரம் பகுதியில் ஆயிரக் கணக் கானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.
இதன் பலனாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொன்னாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து தட்டான்குளம் வரை தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து சாலைப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படவில்லை. சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் மக்கள் பலமுறை புகார்மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பழனி-திண்டுக்கல் ரோட்டில் பயணியர் விடுதி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஓரிரு மாதங் களுக்குள் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங் கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பஸ் வசதி கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story