போலீஸ் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு


போலீஸ் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 July 2018 4:01 AM IST (Updated: 10 July 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் வாகனங்களில் சுழல் விளக்குகள் பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய அரசு வி.ஐ.பி. கலாசாரத்தை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு உள்பட அரசு துறையினர் தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த தடை விதித்தது. மராட்டியத்தில் இந்த உத்தரவு கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்தது.

எனினும் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர், வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், போலீசார் நீலம் அல்லது சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய 3 வண்ணங்கள் சேர்ந்த சுழல் விளக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநில உள்துறை போலீஸ் வாகனங்களில் புதிய வண்ணங்களில் சுழல் விளக்குகளை பொருத்த ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் போலீசார் பயன்படுத்தும் வாகனங்களில் விரைவில் புதிய சுழல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.

Next Story