தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஒத்திகை நிகழ்ச்சிதூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த அசாதாரமான சூழ்நிலையை எப்படி கையாளுவது, தீயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது, தீயில் காயம் அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, தீயணைப்பு துறை சார்பில் நேற்று காலையில் நடத்தப்பட்டது.
இதற்காக அரசு ஆஸ்பத்திரியின் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது போன்ற செயற்கை தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தீ ஒழிப்பு அலாரம் ஒலிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
மீட்புஇதனையடுத்து உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கோமதி அமுதா, ராஜ், சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் 18 தீயணைப்பு வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்கள், 8 ஆம்புலன்சுகள் விரைந்து வந்தன. தீயணைப்பு துறையினர் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் காயம் அடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.