மார்த்தாண்டத்தில் போதிய வசதிகள் இன்றி இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட்


மார்த்தாண்டத்தில் போதிய வசதிகள் இன்றி இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட்
x
தினத்தந்தி 11 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 9:54 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் தற்காலிக மீன் மார்க்கெட் போதிய வசதிகள் இன்றி இயங்குவதால் நவீன மீன்மார்க்கெட் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம்  காய்கறி சந்தையின் ஒரு பகுதியில் தினசரி மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன்களை விற்பதற்கு போதிய வசதிகள் இல்லாமல் காணப்பட்டது. மேலும் போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் இருந்தது.

எனவே, மீன்மார்க்கெட்டை நவீன முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அங்கு நவீன முறையில் ஸ்டால்கள் அமைத்து மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்காக அங்கு இயங்கி வந்த தினசரி மீன் மார்க்கெட், தற்போது அருகில் லாரி பேட்டை அமைந்திருந்த இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு வியாபாரிகள் அமர்ந்து மீன்விற்கவும், பொதுமக்கள் வாங்குவதற்கும் போதிய வசதிகள் இல்லை. மழை மற்றும் வெயில் காலங்களில்  மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் மீன் கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலைமை ஏற்படுகிறது. எனவே நவீன முறையில் கட்டப்பட்டுவரும் மீன் மார்க்கெட் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story