பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து நடந்தது


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 11 July 2018 4:15 AM IST (Updated: 11 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

மாதந்தோறும் சம்பளத்தை தாமதமாக வழங்குவதை கண்டித்து பாபநாசத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாம்,

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை மாதந்தோறும் தாமதமாக வழங்குவதை கண்டித்து பாபநாசத்தில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம் தலைமை தொலைபேசி அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் சங்க கிளை செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் கிளை தலைவர் இளஞ்செழியன், மாவட்ட துணை தலைவர் துரைராஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியவானந்தம், கிளை பொருளாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் மதியழகன், ராஜமாணிக்கம், ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story