மாவட்ட செய்திகள்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு + "||" + 10 years jail court sentenced for raping student

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
களியக்காவிளை,

குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த வெள்ளாந்திமலை பகுதியை சேர்ந்த பாலன் மகன் ராஜேஷ் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற 10–ம் வகுப்பு மாணவியை நோட்டமிட்ட அவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். பின்னர் திடீரென மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி ரப்பர் தோட்டத்தில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றார்.

அந்த வீட்டில் வைத்து மாணவியை ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். மேலும் மாணவி சார்பில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 29.4.2015 அன்று நடந்தது.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குழித்துறை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ராஜேசை குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் மாணவி சார்பில் அரசு வக்கீல் மீனாட்சி ஆஜரானார்.


தொடர்புடைய செய்திகள்

1. நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
எடப்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்த 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
2. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு
மல்லசமுத்திரம் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. கணவனை கொன்று ஆற்றில் புதைத்த பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
கணவனை கொன்று ஆற்றில் புதைத்த பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4. மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்களுக்கு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
5. கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
திருமணம் ஆன ஆண்–பெண் கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.