மாவட்ட செய்திகள்

வக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு + "||" + The court boycott the lawyers in Tanjore denouncing the police officer's assault

வக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

நாச்சியார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயம் அடைந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். புகார் கொடுக்க வருகின்ற மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மை நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1 நாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவுசெய்யப்பட்டது.


அதன்படி நேற்று தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண் வக்கீல்கள் உள்பட 650 பேர் கலந்து கொண்டனர். வக்கீல்களின் இந்த போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.