ஊழல் மிகுந்த ஆட்சியை விரைவில் அகற்றி விட்டு, தி.மு.க. நல்லாட்சி வழங்கும் எ.வ.வேலு பேச்சு


ஊழல் மிகுந்த ஆட்சியை விரைவில் அகற்றி விட்டு, தி.மு.க. நல்லாட்சி வழங்கும்  எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 13 July 2018 3:30 AM IST (Updated: 12 July 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

ஊழல் மிகுந்த ஆட்சியை விரைவில் அகற்றி விட்டு, தி.மு.க. நல்லாட்சி வழங்கும் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு பேசினார்.

உடன்குடி, 

ஊழல் மிகுந்த ஆட்சியை விரைவில் அகற்றி விட்டு, தி.மு.க. நல்லாட்சி வழங்கும் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு பேசினார்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

உடன்குடி அண்ணா திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், ஜோசப், ரவி, நல்லமுத்து, கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலசிங் வரவேற்று பேசினார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

தி.மு.க. நல்லாட்சி...

தமிழகத்தில் மக்களை மதிக்காத ஊழல் மிகுந்த ஆட்சி நடைபெறுகிறது. இதனை விரைவில் அகற்றி விட்டு, தி.மு.க. நல்லாட்சியை வழங்கும். உடன்குடி என்றாலே அனைத்து மக்களும் கூடி வாழும் ஊர் என்று பொருள். அசுரனை அழிப்பதற்கு முருக பெருமானுக்கு வீரபாகு உதவியாக இருந்தார். அதேபோன்று தமிழகத்தில் நடைபெறும் தீய ஆட்சியை வீழ்த்துவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உதவியாக, அவரது படை தளபதியாக அனிதா ராதாகிருஷ்ணன் விளங்குகிறார்.

உலக வரலாற்றிலேயே தேர்தல்களில் தோல்வியே காணாத ஒரே தலைவர் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். அவர் அனைத்து துறைகளிலும் வித்தகராக திகழ்கிறார். அவரது ஆட்சியில்தான் பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை இயற்றினார். அவர் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற அரும்பாடுபட்டதை தமிழக மக்கள் மறக்கவில்லை. உடன்குடி பகுதியில் இயக்கப்பட்ட மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மக்களின் மீது அக்கறை இல்லாத அரசு செயல்படுவதால்தான் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

சென்னை மாநகர முன்னாள் மேயர் சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் பெருமாள், மந்திரமூர்த்தி, பார்த்தீபன், ராஜசேகர், ரவி செல்வகுமார், முருகபெருமாள், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பிரம்மசக்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகன், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசெல்வன், வசீகரன், பசுபதி, காசியானந்தம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொன்ராணி, நெசவாளர் அணி மகா விஷ்ணு, வர்த்தக அணி ரவி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஜான் பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story