மாவட்ட செய்திகள்

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி + "||" + World population Day Awareness Rally

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி பொன்னேரியை அடுத்த சோழவரத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி இதற்கு தலைமை தாங்கினார்.
பொன்னேரி,

குடும்ப நலத்துறை துணை இயக்குனர் இளங்கோ முன்னிலை வகித்தார். சோழவரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயதீபா அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் அனைவரும் குடும்ப நலத்துறை உறுதிமொழி  எடுத்த நிலையில் கலெக்டர் சுந்தரவல்லி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி சோழவரம் பகுதி முழுவதும் சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.


விழாவில் பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் நர்மதா, புதூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் திலகவதி, அருண், வட்டார சுகாதார அலுவலர் ரவிசங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ– மாணவிகள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.