ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 July 2018 12:59 AM IST (Updated: 13 July 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த திருவடிசூலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 30).  கூலித்தொழிலாளி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பரான ரமேஷ் (34) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருக்கழுக்குன்றத்தில்  நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

 செல்வமணி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கருங்குழி சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்  நிலை குலைந்து கீழே விழுந்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் சப்–இன்ஸ்பெக்டர்

விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  ரமேஷ்  சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story