அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தரப்படும் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் பேட்டி


அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தரப்படும் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 13 July 2018 4:15 AM IST (Updated: 13 July 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தரப்படும் என்று தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது கூறினார்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க தேசிய சுகாதார திட்ட இயக்குனரும், கண்காணிப்பாளருமான தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தாரேஸ் அகமது அறந்தாங்கியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். முன்னதாக அரிமளம் ஒன்றிய பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் அறந்தாங்கி ஒன்றியம் ஆமாஞ்சியில் உள்ள கண்மாயை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.அதன்படி சமையல் கூடம், கட்டுமான பணி மற்றும் குழந்தைகள்-மகப்பேறு பிரிவுகளை பார்வையிட்டார்.

பின்னர் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இங்கு விபத்துக்கான சிறப்பு சிகிச்சைபிரிவு ஆரம்பிப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விபத்து உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் முக்கியமாக பரிசோதனை செய்ய சி.டி. ஸ்கேன் தேவைப்படும். இதுகுறித்து ஏற்கனவே அரசின் சார்பில் அறிவித்த நிலையில் இந்த மாதத்திற்குள் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது அறந்தாங்கி கோட்டாட்சியர் பஞ்சவர்ணம், தாசில்தார் கருப்பையா, தலைமை மருத்துவர் தியாகராசன், மயக்கவியல் மருத்துவர் சேகர், எலும்பு முறிவு மருத்துவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story