மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் 10-வது நாளாக நடந்தது + "||" + Rural Development Officers strike took place on 10th day

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் 10-வது நாளாக நடந்தது

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் 10-வது நாளாக நடந்தது
கீழ்வேளூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 10-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர்,

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வழங்கிட வேண்டும். கணினி உதவியாளர்கள், முழு சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பணி மேற் பார்வையாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று 10-வது நாளாக கீழ்வேளூரில் நடைபெற்றது.

இதனால் கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், கணினி ஆப்ரேட்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளுக்காக ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்த பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
2. கழிவு நீர் குளமாக மாறிய திருச்சி ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
திருச்சி ஜங்ஷன் பஸ் நிறுத்தம் கழிவு நீர் குளமாக மாறி விட்டது. இதை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் தினந்தோறும் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
3. மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் 10–வது நாளாக வேலை நிறுத்தம்
மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து சேதுபாவாசத்திரத்தில் மீனவர்கள் நேற்று 10–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. வனத்துறையினர் தடையால் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்
வருசநாடு அருகே வனத்துறையினர் தடையால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
5. பாலஸ்தீனியர்களுக்கான நிதி உதவி நிறுத்தம் - அமெரிக்கா திடீர் முடிவு
பாலஸ்தீனியர்களுக்கான நிதி உதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.