நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 13 July 2018 5:51 AM IST (Updated: 13 July 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் கடந்த 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் அடைமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

அதன்பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை.

இந்தநிலையில், நாளை(சனிக்கிழமை) முதல் மராட்டியத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த மழை கொங்கன் பகுதியில் மிக தீவிரமாக பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 

Next Story