மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு + "||" + Through the website at schools Organize for employment registration

பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி களில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 16.7.2018 அன்று வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரேபதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளில் இணையதளம் https://tnvelaivaaippu.gov.in வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைனிலோ அல்லது தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியோ பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சத்துணவு ஊழியர்கள் போராட்டம், பள்ளிகளில் மதிய உணவு வழக்கம்போல் வழங்கப்படுகிறது
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத் தாமல் பிசுபிசுத்து போனது. இதனால் பள்ளிகளில் மதிய உணவு தடையில்லாமல் வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது.
2. பெரம்பலூர், லெப்பைக்குடிக்காடு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
பெரம்பலூர், லெப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
3. ராசிபுரம் பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா
ராசிபுரம் பகுதியில் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
4. அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு
பெரம்பலூர் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வது குறித்து சமூக நல ஆணையர் அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.