மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது + "||" + In kancipurat In the case of cell phone grabbing 3 people arrested

காஞ்சீபுரத்தில் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது

காஞ்சீபுரத்தில் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது
காஞ்சீபுரத்தை அடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் பாபுஷா (வயது 40). இவர் 12-ந் தேதி காஞ்சீபுரம் ஆஸ்பத்திரி ரோடு வழியாக செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
காஞ்சீபுரம்,

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென பாபுஷாவை வழிமறித்தனர். பிறகு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசில் பாபுஷா புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு பஞ்சாட்சரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


இதனிடையே இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் ஆஸ்பத்திரி ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அந்த வழியாக வந்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (21), தர்மதுரை (19), வெங்கடேசன் (21) என்பதும், பாபுஷாவிடம் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.