மாவட்ட செய்திகள்

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து + "||" + Beach, Between tambourine Many electric trains will be canceled tomorrow

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையே பல மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.


கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி மின்சார ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்களும் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 10.10 மணி ரெயிலும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி ரெயில்களும், செங்கல்பட்டு-கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில், திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கடல் சீற்றத்தால் சேதமான கடற்கரை சாலை கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மீனவர்கள் கடும் அவதி
கொல்லங்கோடு பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.