மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு + "||" + Private corporate employee home jewelry, money theft

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
விக்கிரவாண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி, 


விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). இவர் புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் புதுச்சேரி சிவராந்தகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பூ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு
திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு
உறவினருடன் காரில் வந்த வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணம் கொள்ளை
கூரியர் நிறுவன ஊழியர்கள் போல் நடித்து, வீடு புகுந்த வாலிபர்கள் தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
5. ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது
உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார்.