ஆசிரியர்களுக்கு 2–ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுவில் தீர்மானம்
ஆசிரியர்களுக்கு 2–ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,,
ஆசிரியர்களுக்கு 2–ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
ஆசிரியர்களுக்கு 2–ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும். சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சி வகுப்பை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறைக்கான பட்டியலை வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு தரமான சீருடை வழங்க வேண்டும்.
பணியிடை பயிற்சிக்கான நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் நவீன ஸ்மார்ட் செல்போன் வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தி வருவதை கைவிட வேண்டும்.
ஆர்ப்பாட்டம்அரசு அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் செல்போன் வழங்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களுக்கும் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நாளை (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில், மாவட்ட துணை தலைவர் அந்தோணி நன்றி கூறினார். கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அருள்மரிய ஜான், சுந்தர், அண்ணாத்துரை, கென்னடி, பவுல், சுரேஷ், நெல்லையப்பன், சந்திரசேகர், காமராஜ், ஈஸ்வரன், தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.