மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் பலி


மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 15 July 2018 4:00 AM IST (Updated: 15 July 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் பலியானார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் கபிரியேல் (வயது 49). இவர் கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் பாலசமுத்திரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மரவனூர் அருகே உள்ள கொட்டப்பட்டி பிரிவு சாலையில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த லாரன்ஸ் கபிரியேலை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட லாரன்ஸ் கபிரியேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story