மத்திய,மாநில அரசுகளை கண்டித்து நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 9-ந்தேதி நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மத்திய அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் திரளான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். காவிரியில் கர்நாடக அரசு உபரி நீரையை மட்டுமே திறந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி இதுவரை எந்த தண்ணீரும் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவித்த கதவணை அமைக்கும் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதனால் நீர் ஆதாரத்தை சேமிக்க குளம், குட்டைகளை தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகஸ்டு 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ஆறுகளில் தண்ணீர் வரும் வகையில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.
அரசு மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளில் வடிவாய்க்காலில் செடிகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. எனவே வரும் ஆண்டிலாவது கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 23 பேர் இறந்ததற்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என்கிற அறிக்கை முதல்-அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் மீது அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. இதை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். குடிமராமத்து பணிகள் தாமதமான அறிவிப்பாகும். இதில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை மொத்தமாக சுருட்ட ஏற்பாடு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் சாமிதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story