இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 14 July 2018 11:40 PM GMT (Updated: 14 July 2018 11:40 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான வித்யவிகார்- பைகுல்லா இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.58 மணி முதல் மாலை 4.24 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் வித்யவிகார்- பைகுல்லா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் பிளாட்பார வசதி இல்லாததால் வித்யவிகார், கரிரோடு, சின்ச்போக்லி ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது.

பயணிகள் குர்லா, பைகுல்லாவில் இருந்து கல்யாண் நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் இங்கு செல்லலாம்.

துறைமுக வழித்தடத்தில் குர்லா- வாஷி இடையே இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில் சேவை இருக்காது.

இதேபோல காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.எம்.டி.- குர்லா, வாஷி- பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை மாட்டுங்கா ரோடு- மும்பை சென்டிரல் இடையே விரைவு வழித்தடத்தின் இருவழிப்பாதைகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் சாந்தாகுருஸ்- மும்பை சென்டிரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. 

Next Story