தானே, ராய்காட்டில் லேசான நிலநடுக்கம்


தானே, ராய்காட்டில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 15 July 2018 5:20 AM IST (Updated: 15 July 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

ராய்காட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

தானே,

ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம் ராய்காட்டில் 2.8 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

ராய்காட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தானேயில் உள்ள கல்யாண், உல்லாஸ்நகர், டோம்பிவிலி பகுதியிலும் நேற்று இரவு 9.30 மணியளவில் லேசான அதிர்வு ஏற்பட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இது குறித்து கல்யாண் மேற்கு, கந்தாரி பகுதியை சேர்ந்த துபே என்பவர் கூறுகையில், நான் குளியல் அறையில் இருந்தபோது லேசான அதிர்வை உணர்ந்தேன். எனவே நான் என் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டேன், என்றார்.

கல்யாண் ஸ்ரீகாம்ப்ளக்ஸ் பகுதியில் வசித்து வரும் டிக்கெட் பரிசோதகர் உமேஷ் கூறுகையில், ‘லேசான அதிர்வு ஏற்பட்டவுடன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டனர்’, என்றார்.

Next Story