மும்பையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் சிவசேனாவும், பா.ஜனதாவும் மாநகராட்சியை விட்டு விலக வேண்டும்
மும்பையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் சிவசேனாவும், பா.ஜனதாவும் மாநகராட்சியை விட்டு விலக வேண்டும் என மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார்.
மும்பை,
மும்பையில் மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மும்பை மாநகராட்சி சார்பில் 48 மணி நேரத்திற்குள் சேதமான சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சி கூறிய கெடு நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து தங்கள் கட்சியினருடன் பாந்திரா பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்கும் பணியில் சஞ்சய் நிருபம் ஈடுபட்டார்.
இதுகுறித்து மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:-
மாநகராட்சி தானாக முன்வந்து 48 மணி நேரம் காலக்கெடு விதித்துக்கொண்டது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிந்தது. இருப்பினும் மாநகராட்சி பெரும்பான்மையான சாலைகளை சீரமைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. .மாநகராட்சி மும்பையில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து, மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையெனில் சிவசேனாவும், பா.ஜனதாவும் மாநகராட்சியை விட்டு விலகவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story