அ.தி.மு.க.வுடன், மு.க.ஸ்டாலின் மறைமுக நட்பு வைத்து உள்ளார் திருச்சியில் டி. ராஜேந்தர் பேட்டி


அ.தி.மு.க.வுடன், மு.க.ஸ்டாலின் மறைமுக நட்பு வைத்து உள்ளார் திருச்சியில் டி. ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2018 4:45 AM IST (Updated: 16 July 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வுடன் மு.க. ஸ்டாலின் மறைமுக நட்பு வைத்து உள்ளார் என்று திருச்சியில் டி. ராஜேந்தர் கூறினார்.

மலைக்கோட்டை,

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் நேற்று திருச்சியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் விஜய் திரைப்படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர் மத்திய மந்திரியாக இருந்த போது புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என கேட்கிறேன். தமிழகத்தில் முட்டை ஊழல் முடை நாற்றம் எடுக்கிறது. பருப்பு ஊழல் உள்ளிட்ட ஊழல்களால் இங்கு காட்டாட்சி நடக்கிறது.

இந்த ஆட்சி கண்டிப்பாக அகற்றப்படவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் 88 எம்.எல்.ஏ.க்களுடன் உள்ளார். இந்த எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்கிறார். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுடன் அவருக்கு மறைமுக நட்பு உள்ளது. அதனால் தான் இந்த ஆட்சி நீடிக்கட்டும் என நினைக்கிறார். இது தமிழகத்துக்கு நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story