தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 16 July 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட தலைவர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை தாங்கி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் அருள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.ராஜூ இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ், மைதீன், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டடது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் காமராஜர் உருவச்சிலை, 7-வது வார்டில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப்படம், காமராஜ் கல்லூரியில் உள்ள உருவச்சிலை ஆகியவற்றுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாயர்புரம் மெயின் பஜாரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கி காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேர்வைக்காரன்மடத்தில் நடந்த விழாவுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட நிர்வாகி செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் உள்ள உருவச்சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், விவசாய அணி மாவட்ட இணை செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில மருத்துவரணி அமைப்பாளர் வெற்றிவேல், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலர் மந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முக்காணி ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Next Story