பெங்களூருவில் இருந்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு 13 ஆயிரத்து 160 புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன
பெங்களூருவில் இருந்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு 13 ஆயிரத்து 160 புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
சேலம்,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. புதிய வாக்குப்பதிவு எந்திரங்களும், சின்னம் பொருத்தும் கருவிகளும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரோகிணி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் லாரியில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டது. இந்த எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இவற்றை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்திற்கு பெங்களூரு பெல் நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரத்து 960 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 8 ஆயிரத்து 200 புதிய வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 160 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு, உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தனி தாசில்தார் கோபால கிருஷ்ணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story