கிருஷ்ணகிரியில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்


கிருஷ்ணகிரியில் தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 July 2018 3:45 AM IST (Updated: 16 July 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

 கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், சுந்தர்ராஜன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி துணை செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை மற்றும் இளைஞரணியை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story