மாவட்ட செய்திகள்

பெல் நிறுவனத்தில் வேலை + "||" + Work at BHEL Company

பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. தமிழகத்தின் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பெங்களூருவில் உள்ள பெல் கிளைக்கு புராஜெக்ட் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் உள்ளன.

புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 இடங்களும், சூப்பிரவைசர் பணிக்கு 34 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 21-7-2018-ந் தேதியாகும். பின்னர் நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் 26-7-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கவும் www.bheledn.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு வீரர்களுக்கு ராணுவ வேலைவாய்ப்புகள்
இந்திய ராணுவத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
2. தமிழக வேலைவாய்ப்புகள்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ஜிப்மர், டாடா மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணிகள்
ஜிப்மர் மற்றும் டாடா மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு மொத்தம் 477 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்...
4. வனத்துறையில் 1178 பணியிடங்கள்
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் டி.என்.எப்.யு.எஸ்.ஆர்.சி. எனப்படுகிறது. இந்த அமைப்பு வனத்துறையில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது.
5. பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை
இந்துஸ்தான் பெட்ரோலியம் கழக நிறுவனம் சுருக்கமாக எச்.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் 6 ஆயிரத்து 357 கோடி லாபம் ஈட்டிய நிறுவனமாகும்.