சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர்களின் கார்களில் தொடர்ந்து பறந்த தேசிய கொடிகள்


சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர்களின் கார்களில் தொடர்ந்து பறந்த தேசிய கொடிகள்
x
தினத்தந்தி 18 July 2018 4:36 AM IST (Updated: 18 July 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திய பின்னரும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் கார்களில் தொடர்ந்து தேசியக்கொடிகள் அவிழ்க்கப்படாமல் காட்சியளித்தன.

புதுச்சேரி,

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கார்களில் தேசியக்கொடியை பறக்கவிட விதிகள் அனுமதிக்கின்றன. அந்த கார்களில் அந்த முக்கிய பிரமுகர்கள் இருக்கும்போது அந்த கொடிகள் பறக்கவிடப்படலாம்.

அவர்கள் இல்லாதபோது கார்களில் உள்ள தேசியக்கொடியை கழற்றிவிடவேண்டும். இந்த நடைமுறை காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும். இந்த விதிமுறைகள் குறித்து முக்கிய பிரமுகர்களின் கார் டிரைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக புதுச்சேரி மாநிலத்தில் இந்த விதிமுறை மதிக்கப்படுவதில்லை. சபாநாயகர், அமைச்சர்கள் காரை விட்டு இறங்கி சென்ற பின்பு கார்கள் அதற்குரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்போதும் தொடர்ந்து கார்களில் தேசியக்கொடிகள் அகற்றப்படாமல் பொருத்தப்பட்டே உள்ளன.

முக்கிய பிரமுகர்களிடம் பணியாற்றிய மூத்த டிரைவர்கள் பலர் இல்லாத நிலையில் தற்போதுள்ள டிரைவர்களுக்கு இந்த நடைமுறை தெரியுமா? என்பது தெரியவில்லை. சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று சட்டமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கார்களில் தொடர்ந்து தேசியக்கொடிகள் பொருத்தப்பட்ட நிலையிலேயே காட்சியளித்தன.

Next Story