பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்,
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுபடுத்தினார். பெற்றோர் அவசரம் அவசரமாக காலையில் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு சரியான உணவு அளிக்க முடிவதில்லை. இதனால் தான் நாள்தோறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கிரிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி நிர்வாகி வேதரெத்தினம் வரவேற்றார். முடிவில் குருகுலம் ஆசிரியர் பயிற்சி பள்ளி நிர்வாகி கேடிலியப்பன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story