பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
x
தினத்தந்தி 20 July 2018 3:45 AM IST (Updated: 20 July 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் தனியார் தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து தேவைப்படும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.150 அளவில் தேவைக்கேற்ப வழங்கப்படும். தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆயிரம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 அளவில் வழங்கப்படும். அரியலூர் மாவட்டம் திருமானூர், அரியலூர் தா.பழூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டி மடம் பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் இடங்களுக்கு அருகே உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தை அணுகலாம். விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் 56 டி ராஜாஜி நகர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நிர்வாகப் பொறியாளர், ஊரக குடிநீர் திட்டக் கோட்டத்தை அணுகி பயன்பெறலாம்.

இந்த தகவலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் விசுவநாதன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story