மேலூர் அருகே நடந்த மஞ்சு விரட்டில் 10 பேர் படுகாயம்
மேலூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.
மேலூர்,
மேலூர் அருகே உச்சரிச்சான்பட்டியில் மந்தைகருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள கண்மாய் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், சிங்கம்புணரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காளைகள் பங்கேற்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் குவிந்திருந்தனர்.
கிராமத்தினர் சார்பில் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டு சீறிபாய்ந்து சென்றன. கூட்டத்துக்குள்ளும் பாய்ந்தன.
காளையை அடக்க முயன்ற 10 பேர் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மஞ்சுவிரட்டில் பங்கேற்ற சிறப்பு காளைகளுக்கு கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பரிசுகளை கிராமத்தினர் வழங்கினர்.

Related Tags :
Next Story